நான் இப்போது ஆசிரமத்தில் இருக்கிறேன். இது மலைகளின் வழியாக பாய்ந்து வரும் ஒரு நதியுடன் அழகாக அமைந்துள்ளது; அகலமாகவும் ஆழமற்றதாகவும் உள்ள ஒரு நதி. தன் பட்டியலிடப்பட்ட ஓட்டத்தினால், அது அதனுடய சுதந்திரத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் அதனுடய ஆழமற்ற தன்மை, பொருட்களின் தேடுதலில் ஒரே நேரத்தில் பல வேலைகளிளே பரவி கொன்டுள்ள ஒருவன் மனநிலை நினைவூட்டுகிறது. அவனடய அமைதியையும் தனித்துவத்தின் ஆழத்தையும் இழக்கவைத்த ஒரு பரவி.

தன்னலமற்ற பங்களிப்பும், மிகைப்படுத்திச் சொல்ல முடியாத அளவு, ஆசிரமத்தின் திட்டத்தில் அதிகமான ஈடுபாடும் உள்ள ஒரு வாசகர் பின்வரும் கேள்வியைக் கேட்டுள்ளார். வேறுவிதமான சொற்களைப் பயன்படுத்தி இதேபோன்று பலர் கேட்டுள்ளனர். கீழே காண்க:

பிரபு, மனதையும், எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் கலையைப் பற்றிய இன்னும் கொஞ்சம் வழிகாட்டுதலை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்க முடியுமா? ஒரு முறை அவற்றைத் தூக்கி எறிந்தாலும் பூமாராங்கைப் போன்று திரும்பி வருகின்றன. முயற்சி செய்து கட்டுப்படுத்தினாலும் மேலும் அதிகமானவை உள்ளே வந்து அமைதியின்மை, விரக்தி போன்ற விளைவுகளைத் தான் ஏற்படுத்துகின்றன. இது மிகவும் கடினமான பணியென்றும் ஆனால் சாத்தியமானது என்றும், ஒரு முறை கட்டுப்படுத்தினால் பேரின்பம் அடையலாம் என்றும் உங்களுடைய அறிக்கை கூறுகிறது.

மனதைக் கட்டுப்படுத்தும் செயல் தான் ஒருமுகப்படுத்துதல் (தாரனா) ஆகும். இது போன்ற கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் கலை தான் தியானம் (தியானா). மனதில் ஒருமையை அடைவதே சமாதி ஆகிறது. மனதைக் கட்டுப்படுத்துவதாவது தானாகவே அனைத்துச் சிந்தனை ஓட்டங்களையும் சரிபார்க்கிறது; மற்றும் மாற்றுமுகமாகவும் செய்கிறது. ஏனென்றால் மனம் மற்றும் எண்ணங்கள் பிரிக்க முடியாதவை ஆகும். இவை யாவும் அறிகுறியான விளக்கங்களே. கூடிய சீக்கிரத்தில் இந்த விஷயம் (தியானம்) பற்றி மிக விரிவாகக் கூறுவேன்.

மனதில் அமைதியை அடைவதற்கு ஆரம்பத்தில் விடாமுயற்சி மற்றும் அக்கறையான பிரயத்தனம் தேவைப்படுகிறது. உங்களது தியானத்தின் போது அதன் தரத்தை மேம்படுத்த, ஒவ்வொரு முறையும் உங்கள் மனம் நிலைதடுமாறுவதை உணரும் போதும், நீங்கள் தியானத்தின் புள்ளி அல்லது சிந்தனைக்கு, மனதை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதை அதிகப்படியான கடும் முயற்சி இல்லாமல் மெதுவாகச் செய்ய வேண்டும். நேர்மையின்றி தொடர்ந்த மற்றும் திணிக்கப்பட்ட முயற்சியால் மனதைக் கட்டுப்படுத்தினால் அது மனதை அமைதியற்றதாக்கிவிடும்.

மிகுந்த சோர்வான மற்றும் கவனக்குறைவான அனுபவத்தைத் தரும் நீண்ட நேரத் தியானம் செய்வதற்குப் பதிலாக பல குறுகிய ஊக்கம் தருகிற அமர்வுகளைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. தீவிரமான கவனம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு அமர்விலும் கால அவகாசத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். அடுத்துவரும் சிறிது காலத்திற்கு என்னைப் பொருத்துக் கொள்ளவும். தேடுபவர்களுக்குத் தியானத்தின் கட்டமைப்பை ஆவணப்படுத்துவது என்னுடைய முன்னுரிமையாக உள்ளது. இந்தச் செயலுக்கான பாதை, முன் நிபந்தனைகள், வழிமுறைகள், மைல்கற்கள், தடைகள் மற்றும் முடிவுகள் பற்றி விரிவாக நான் விளக்குவேன். அதுவரை, இந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளுங்கள். நிபந்தனைகள் செய்யப்பட்ட மனதின் விளைவே எண்ணங்கள் ஆகும். இயற்கையான மனநிலை என்பது உண்மையில் தூய ஆனந்தம், கிட்டத்தட்டச் சிந்தனையற்ற நிலையாகும்.

இறுதியை அடையும் வரை உறுதியைக் கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் உறுதியாக இருந்தால் கடவுள் அருள் உங்களுக்கு இனிமையான ஆச்சரியத்தைக் கொடுக்கும். எப்படி? தெரிந்து கொள்ள தியானியுங்கள்!

அமைதி.
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – Meditation and Thoughts.